அரசியல் மாற்றத்துக்குப் பிறகு முதல்முறையாக பீகார் செல்லும் மோடி!Sponsoredபீகார் மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சி அமைத்த பிறகு, முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை அங்கு செல்லவிருக்கிறார். 

பீகாரில், லாலு பிரசாத் யாதவ் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் நித்திஷ் குமாரின் ஜக்கிய ஜனதாதளம் கூட்டணி அமைத்து அங்கு ஆட்சி அமைத்தது. நிதிஷ்குமார் அந்த மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், ஜூலை மாத இறுதியில் லாலு பிரசாத் கட்சியுடன் முரண்பாடு என நிதிஷ்குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். நிதிஷின் முடிவால், அரசியலில் பரபரப்பு நிலவியது. ஆனால், அதற்கு அடுத்த நாளே பாரதிய ஜனதா கட்சியின் உதவியுடன் மீண்டும் முதல்வரானார்.  

Sponsored


இந்த ஆட்சி மாற்றம்குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களின் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தின. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சரத் யாதவ், அக்கட்சியிலிருந்து விலகினார். 

Sponsored


அந்த அதிரடி ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி நாளை பீகார், பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளச் செல்கிறார். இந்தச் சுற்றுப் பயணத்தில், பீகாரின் வளர்ச்சிக்கான திட்டங்களைப் பிரதமர் அறிவிக்கக்கூடும் என அங்குள்ள அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.Trending Articles

Sponsored