ராகுல்காந்திக்கு விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி - சோனியா காந்திSponsoredகாங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பில் இருக்கிறார் ராகுல் காந்தி. இவரைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் எனும் குரல் நாள்தோறும் வலுத்துவருகிறது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றின. 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல்நிலையின் காரணமாக முழு வேகத்துடன் இயங்க முடியவில்லை. அதனால், ஆளும் பாஜகவை எதிர்த்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ராகுல் காந்தி தலைவராக வேண்டும் எனக் கட்சியின் அடுத்தக் கட்டத் தலைவர்களும் விரும்புகின்றனராம். 

Sponsored


இந்நிலையில் சோனியா காந்தி நேற்று, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், 'ராகுல் காந்தி எப்போது தலைவராவார் எனும் கேள்வியைத் தொடர்ந்து எழுப்பிவருகிறீர்கள். அது விரைவில் நடக்கப் போகிறது' என்று கூறியுள்ளார். வரும் பாராளுமன்றத் தேர்தலைக் கொண்டே  சோனியா காந்தி  இந்த அறிவிப்பைக் கூறியுள்ளதாகப் பேசப்படுகிறது. அவரின் அறிவிப்பு, காங்கிரஸ் கட்சியினருக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. 

Sponsored


அநேகமாக, நவம்பர் மாதத்தின் இறுதியில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகக்கூடும். Trending Articles

Sponsored