'மத்திய அரசிடம் தமிழக அரசு மண்டியிட்டு சரணடைந்துள்ளது' - மு.க.ஸ்டாலின் தாக்கு!Sponsoredதமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம்களை பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தில் நடந்து வரும் குதிரைபேர ஆட்சி மத்திய அரசிடம் சரணாகதி அடைந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை அடுக்க முடியும். மத்திய அரசிடம் இந்த அரசு மண்டியிட்டு சரணடைந்துள்ளது. இதற்கு உதாரணங்களாக, நீட் பிரச்னை, காவிரி மேலாண்மை பிரச்னை, விவசாயிகளின் பிரச்னை என்று என்னால் எத்தனையோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜ.க பற்றி பேசியுள்ளது அதில் ஒன்றுதான்' என்று கூறினார். 

Sponsored


Sponsored


பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி கேள்வி எழுப்பியபோது, 'ஆர்.கே.நகரில் 40,000 போலி வாக்களர்கள் உள்ளதாக தகவல் வருகிறது. ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க பணப்பட்டுவாடா செய்ததை தி.மு.க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை' என்று ஆதங்கப்பட்டார்.Trending Articles

Sponsored