`நான் ஒரு தொகுதிக்கு மட்டும் அமைச்சரல்ல...' - கொதிக்கும் ஜெயக்குமார்Sponsoredசென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `நான் ஒரு தொகுதிக்கு மட்டும் அமைச்சர் அல்ல. மொத்த மாநிலத்துக்கும்தான் அமைச்சர்' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து காசிமேட்டில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதைப் பற்றி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், `ஜெயக்குமார் மீன்வளத்துறை அமைச்சர். ஆனால், அதை அவர் மறந்து 'சூப்பர் முதலமைச்சராக' செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மீன் வளத்தைப் பற்றியும் அதைச் சார்ந்த மக்களைப் பற்றியும் சிந்திக்க அவருக்கு நேரமில்லை. எனவேதான், இன்று காசிமேட்டில் மீனவ மக்கள் ஜெயக்குமாருக்கு எதிராகப் போராடினர்' என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

Sponsored


இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், `இரட்டை இலைச் சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும். தினகரன் அணியினர் போலி ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளனர். எனவே அவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வர வாய்ப்பில்லை. தமிழக  அரசை கவிழ்க்க தி.மு.க-வுடன் சேர்ந்து டி.டி.வி.தினகரன் கூட்டுச்சதி செய்து வருகிறார். அமைச்சர் என்றால் மாநிலம் முழுவதுக்கும்தான், ஒரு தொகுதிக்கு மட்டுமல்ல' என்று ஸ்டாலினுக்குப் பதிலளிக்கும் தொனியில் கருத்து தெரிவித்திருந்தார்.
 

Sponsored
Trending Articles

Sponsored