‘2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும்’, சி.பி.ஐ தரப்பு!Sponsoredஇந்தியாவின் மிகப்பெரிய ஊழல் வழக்கு என்று கூறப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. கனிமொழி எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட, வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலைசெய்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார். நாடு முழுவதும் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என சி.பி.ஐ தரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில், சி.பி.ஐ. தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் உரிய ஆதாரம் இல்லை. குற்றத்தை நிரூபிக்க சி.பி.ஐ தவறிவிட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த தீர்ப்புகுறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞா்களிடம் பேசியபோது, “இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்படும். மேலும், தீா்ப்பின் நகல் கிடைத்தபிறகு, நீதிபதி தொிவித்துள்ள குற்றச்சாட்டுகளைக் களைந்து, மேல்முறையீடு செய்வோம்”, என்றனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored