ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜ.க பெற்ற ஓட்டுகள் : ஜிக்னேஷ் மேவானி கிண்டல்



Sponsored



ர்.கே நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்குகள் குறித்து குஜராத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு வெறும் 1,417 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், 'எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' எனும் நோட்டாவுக்கு 2,373 வாக்குகள் கிடைத்தன. நாட்டின் பல்வேறு மாநிலங்களையும் மத்தியிலும் ஆட்சி செய்து வரும் ஒரு தேசிய கட்சி, இடைத்தேர்தல் ஒன்றில் நோட்டாவைவிட குறைவான வாக்குகளையே பெற்றது என்பது பொது வெளியிலும், சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. ஏற்கெனவே, பா.ஜ.க வின் இந்த நிலைமை பற்றி பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். 

Sponsored


Sponsored


இந்நிலையில், பிரபல சமூக செயற்பாட்டாளரும், குஜராத் மாநில சுயேச்சை எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் உலகிலேயே பெரிய கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க, தமிழகத்தில் 50 லட்சம் மிஸ்டு கால் அழைப்புகள் பெற்றதாக தெரிவித்திருந்தது. ஆனால், அவர்கள் வாங்கி இருக்கும் ஓட்டுகளோ வெறும் 1417தான். இதை பா.ஜ.க.வினரால் எளிதில் ஜீரணிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார். பலரும் இந்த ட்விட்டை பகிர்ந்து வருகின்றனர். 

ஜிக்னேஷ் மேவானி, சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரைவிட 19,696  வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Trending Articles

Sponsored