`தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், வெளியிலிருந்து ஆதரவு!' - தங்க தமிழ்ச்செல்வன் உறுதிSponsored`ஒரு வாரத்துக்குள், என் அடுத்த கட்ட நகர்வுகுறித்து பொதுத் தளத்தில் அறிவிப்பேன்' என்று டி.டி.வி.தினகரன் சில நாள்களுக்கு முன்னர் அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார். இந்த அடுத்த கட்ட நகர்வு, தனிக்கட்சி தொடங்குவதுதான் என்று தினகரனுக்கு நெருக்கமாக இருக்கும் வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன. தினகரன் தனிக் கட்சி தொடங்கும் பட்சத்தில், அவருக்கு ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவர் பக்கம் நிற்பார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, இன்னும் தெளிவான பதில் கிடைக்காத நிலையில், இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், `ஒரு வேலை தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், அதில் எங்களால் சேர முடியாது. ஆனால், அவர் தனியாகக் கட்சி தொடங்கும் பட்சத்தில், 18 எம்.எல்.ஏ-க்களும் வெளியில் இருந்து ஆதரவு தருவோம். அவர் தனியாகச் செயல்படுவார். நாங்கள் தனியாகச் செயல்படுவோம்' என்று பளீச் பதிலைக் கொடுத்துள்ளார், தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored