மத்திய பொது பட்ஜெட் தாக்கல்: என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?



2018 -19-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இந்த ஆட்சியின் கடைசி பொது பட்ஜெட், 70 ஆண்டுகால வரலாற்றில் இந்தியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் உள்ளிட்ட அம்சங்களால் இதற்கு வணிகர்கள் உட்பட அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. 

Sponsored


மகாராஷ்ட்ர மாநில எம்.பி சிந்தாமன் வங்கா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்பு, பட்ஜெட் உரையை அருண் ஜெட்லி வாசித்தார். அதில், விவசாயம், கிராமப்புற மேம்பாடு, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். மேலும், பல்வேறு சலுகைகளை அறிவித்த அருண் ஜெட்லி, கூடவே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் வருமான உச்சவரம்பில் மாற்றம் இல்லை உள்ளிட்ட அதிர்ச்சிகர அறிவிப்புகளையும் வெளியிட்டார். 

Sponsored


இதற்கிடையே மத்திய பொது பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம்:
தமிழிசை: நாட்டு பொருளாதாரம், வீட்டுப் பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆரோக்கியமான பட்ஜெட் இது. இந்தப் பட்ஜெட் தாக்கல் என்பது ஐ.சி.யூ-வில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவதுபோல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம். விரைவில் அதை நடக்க வைப்போம். 

Sponsored


திருநாவுக்கரசர்: வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில்கொண்டு ஏராளமான அறிவிப்புகள் உள்ளன. தேர்தலுக்கு ஏற்ப ஜி.எஸ்.டி வரியைக் குறைத்து பா.ஜ.க மக்களை ஏமாற்றி வருகிறது.

வைகோ: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என ஜெட்லி கூறுவது அதானி குழுமத்தையா; விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் எனக் கூறும் ஜெட்லி எந்த உலகத்தில் இருக்கிறார்?

திருமாவளவன்: விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. அதேபோல், விவசாயிகளைப் பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. 

நாராயணசாமி: மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டில் யூனியன் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 

கிரண்பேடி: அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட் விவசாயம், கிராம, நகர்ப்புற வளர்ச்சி, இளைஞர்கள், பெண்களுக்கு முன்னேற்றம் அளிக்கிறது.

பொன்.ராதாகிருஷ்ணன்: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் ஏழைகளின் வளர்ச்சி சார்ந்ததாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

ராமதாஸ்: வேளாண் அறிவிப்புகளைத் தவிர, பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. 

சி.விஜயபாஸ்கர்: பொது பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. 

ஜெ.அன்பழகன்: மத்திய அரசின் பட்ஜெட் ஒரு பக்கம் ஆங்கிலத்திலும் மறு பக்கம் இந்தியிலும் உள்ளது.



Trending Articles

Sponsored