இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் கடவுளுக்கு நன்றி: ப.சிதம்பரம் சாடல்!



2018 - 19ம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதேபோல் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு சம்பள உயர்வு, மற்றும் வருமான உச்சவரம்பில் மாற்றம் இல்லை உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. 

Sponsored


இந்தநிலையில் பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் கடவுளுக்கு மிக்க நன்றி. நிதி பற்றாக்குறையை சமாளிப்பதில் நிதியமைச்சர் தோல்வி அடைந்துள்ளார். பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளதை விட நிதி பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. 2017-18-ல் நிதிப்பற்றாக்குறை வரம்பு 3.2% என்பது மீறப்பட்டு தற்போது 3.5% ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.  விவசாயத்திற்கான பட்ஜெட் இது என்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் எந்த திட்டத்தையும் பட்ஜெட்டில் காண முடியவில்லை. இதன்மூலம் விவசாயிகளின் துயரங்கள் மீண்டும் தொடர்கிறது. மேலும் பட்ஜெட்டில் தனியார் முதலீட்டை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை. வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான உச்சவரம்பை குறைக்கவில்லை. இதேபோல் ஏற்றுமதியை அதிகரிக்கும் எந்த ஒரு அறிவிப்பையும் பட்ஜெட்டில் நான் கேட்கவில்லை. உலகின் பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்றும் குடும்ப சுகாதாரத்துக்காக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு என்பதும் மிகப்பெரிய ஏமாற்று வேலை.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored