`முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்!' - சசிகலா விவகாரத்தில் கலகலத்த ஜெயக்குமார்



தமிழகத்திற்குப் பல்வேறு ரயில் திட்டங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2018 - 19ம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் முன் எப்போதும் இல்லாத அளவு, ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மத்திய பொது பட்ஜெட் குறித்துத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மக்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. நதிகள் இணைப்புக்கான நிதி குறித்து வலியுறுத்தப்பட்டது. 

Sponsored


வருங்காலத்தில் மத்திய அரசு அதைச் சரி செய்யும் என நம்புகிறோம். அதேபோல், ரயில்வே திட்டங்களில் தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் நாகை - கன்னியாகுமரி இடையேயான நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம். வருமான வரி செலுத்தும் மாத சம்பளக்காரர்களுக்கான நிரந்தரக் கழிவுச் சலுகையாக ரூ.40 ஆயிரம் அறிவித்துள்ளது போதாது. வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் பட்ஜெட்டில் அறிவித்த நிதி ஒதுக்கப்படும்போதுதான் மேற்கொண்டு எதுவும் கூற முடியும். முன்னதாக சசிகலா குடும்பம் குறித்த கேள்விக்கு சசிகலா விவகாரத்தில் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored