`பட்ஜெட்டை அருண் ஜெட்லி இந்தியில் படித்தது ஏன்?' தமிழிசை அடடே விளக்கம்!மொழியை வைத்து அரசியல் செய்வதை தமிழக இளைஞர்கள் இனி ஏற்க மாட்டார்கள் எனத் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட் உரை முதல்முறையாக இந்தியில் வாசிக்கப்பட்டது. இதற்குத் தமிழகத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, தற்போது அதற்குத் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில், மற்ற மாநிலங்களுக்காவே இந்தியில் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையின்  பிரதி தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளது. 

Sponsored


எனவே, இந்தியில் பட்ஜெட் வாசிக்கப்பட்டதை அரசியலாக்க வேண்டாம். மொழியை வைத்து அரசியல் செய்வதை தமிழக இளைஞர்கள் இனியும் நம்ப  தயாராக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தமிழ் இன்னும் அதிகமாக ஓங்கி ஒலிக்கும். மற்ற காட்சிகளைக் காட்டிலும் பா.ஜ.க-வுக்கு தான் அதிகத் தமிழ்ப்பற்று இருக்கிறது. தமிழ்ப் பற்றாளர்களில் வைகோவுக்கு, பா.ஜ.க. தலைவர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. அனைவருக்கும் பயன்படும் வகையிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான திட்டங்களைக் கொண்டுவர முயன்று வருகிறோம். மேலும் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored