'தமிழகத்திற்குப் போதுமான நிதி இல்லை' பட்ஜெட்டை விமர்சித்த தம்பிதுரை!Sponsoredமத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என மக்களவைத் துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி-யுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட 2018-ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், "பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழகத் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி இதுவரை வரவில்லை. அதேபோல், ஜிஎஸ்டியால் தமிழகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பிற்கான நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. தமிழகத்திற்கான உரிமை பறிபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒரே இந்தியா என்ற கொள்கையை அ.தி.மு.க. எதிர்க்கும். ஒரே நாடு என்று கூறி அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு குவித்துக்கொள்வது நல்லதல்ல. அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். காலம் தாழ்த்தித்தான் ஜெயலலிதாவின் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றுகிறது. மேலும் செலவு குறையும் என்பதால் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது. அதை நான் வரவேற்கிறேன்" என்றார்.  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored