'பேரறிஞர் அண்ணா நினைவு தினம்!' - ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வினர் அமைதிப் பேரணிபேரறிஞர் அண்ணாவின் 49-வது நினைவு தினத்தை ஒட்டி, தி.மு.க-வினர் பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 49-வது நினைவு தினம் ஆகும். 

Sponsored


அதை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்துகின்றனர். இந்தநிலையில், அண்ணா நினைவு தினத்தையொட்டி, தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. 

Sponsored


Sponsored


இதில், தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் டிஆர் பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதி மாறன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர். Trending Articles

Sponsored