முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கம்! - ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிவிப்பு



கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

Sponsored


அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பதவியேற்றது முதல் கட்சியை மேம்படுத்துவற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்களை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் அதிரடி காட்டி வருகின்றனர். குறிப்பாக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு நாள்தோறும் அவர்களை களையெடுக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதன்படி, முன்னாள் அமைச்சரான வளர்மதி ஜெபராஜை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காரணங்களுக்காக மதுரை மாநகர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோரை நீக்கி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored