'அரசின் திட்டங்களுக்கு அ.தி.மு.க உறுப்பினர் அட்டை கட்டாயம்' - செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு!அ.தி.மு.க உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசின் திட்டங்களை பெற முடியும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


உள்ளாட்சித் தேர்தல் வருவதை முன்னிட்டு அ.தி.மு.க-வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு மதுரை மாநகர் அ.தி.மு.க சார்பாக இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பேசினார். 

Sponsored


அப்போது, "அதிமுக உறுப்பினர் அட்டை உயிர் போன்றது. அதிமுகவினர் ஒவ்வொருவரும் உறுப்பினர் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இந்த அட்டை இருந்தால் தான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அரசாங்கத்தின் எந்தவித உதவியும் பெற முடியும் என பட்டவர்த்தனமாக தெரிவித்துக்கொள்கிறேன்".  இது புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்லூர் ராஜு, `காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க இறுதி வரை போராடும். பிரதமர் மோடியிடம் காவிரி விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுப்பார்' என்றும் தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored