மொபைல் ஆப் மூலம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி: செங்கோட்டையன் அறிவிப்பு!Sponsoredநீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

மாணவர்களுக்கு அளிக்கப்படும் நீட் பயிற்சிகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் விளக்கினார். அதில், "மொபைல் ஆப் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 70,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வருகின்றனர். சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்து வருகிறோம். சிறந்த மாணவர்கள் 2,000 பேருக்கு சென்னையில் 18 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மே 6-க்குப் பிறகு, மாணவர்களின் தேர்ச்சி அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை" என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored