எம்.எல்.ஏ -க்களின் ஊதிய உயர்வு மசோதா: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்



Sponsored



எம்.எல்.ஏ-க்கள் ஊதிய உயர்வு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். 

தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கான ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தி கடந்த ஜூலை மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, 55 ஆயிரம் ரூபாயாக எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல், ஓய்வுபெற்ற எம்.எல்.ஏ-க்களின் ஓய்வூதியம், 12 ஆயிரம் ரூபாயிலிருந்து, 20 ஆயிரமாகவும், எம்.எல்.ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, 2 கோடியிலிருந்து 2.50 கோடியாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பல்வேறு கட்சி எம்.எல்.ஏ-க்களும் வரவேற்பு அளித்தாலும், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. பின்னர், கடந்த 10-ம் தேதி சட்டப்பேரவையில் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored