12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் சென்றார் வைகோSponsored12 ஆண்டுகளுக்குப் பிறகு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அண்ணா அறிவாலயம் சென்றுள்ளார். 

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக, கடந்த 29-ம் தேதி, தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட போராட்டம்குறித்து ஆலோசிப்பதற்காக, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

Sponsored


Sponsored


இவர்களுடன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் கலந்துகொண்டார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ அண்ணா அறிவாலயம் சென்றுள்ளார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வரவேற்றார். முன்னதாக, 2006-ம் ஆண்டு, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ கலந்துகொண்டார். சமீபத்தில்தான், தி.மு.க-வுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, காவிரி நீர் விவகாரம், பேருந்துக்கட்டண உயர்வு, நீட் விவாகரங்கள்குறித்து இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Trending Articles

Sponsored