உடல்நலக் குறைவு காரணமாக வெல்லமண்டி நடராஜன் அப்போலோவில் அனுமதி!உடல்நலக் குறைவு காரணமாகச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் வெல்லமண்டி நடராஜன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக முதல்வர் பழனிசாமிக்கு நேற்று கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored