`ரூ.1,000 பஸ் பாஸில் மாற்றமா?' - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்Sponsoredகடந்த 20-ம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. 

இதையடுத்து பெருமளவு கட்டணத்தை உயர்த்திவிட்டதாக எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முழுமையாகப் பேருந்துக்கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் விருப்பம்போல பயணிக்கும் ஒரு நாள் பஸ் பாஸ் கட்டணம், ரூ.50-லிருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாகவும் மாதாந்தர பஸ் பாஸுக்கான கட்டணம் ரூ.1,000-லிருந்து, ரூ.1,300 ஆக உயர்த்தப்பட இருப்பதாகவும் இன்று தகவல் வெளியாகியது. இதற்குப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

Sponsored


அதில்,  "மாதாந்தர சீஸன் டிக்கெட் மட்டுமே ரூ.240-லிருந்து ரூ.350 ஆக உயர்த்தப்படுகிறது. மாநகரப் பேருந்துகளில் தொடர்ந்து ரூ.1,000 பஸ் பாஸ் வழங்கப்படும். ஒரு நாள் விருப்பம்போல் பயணம் செய்வதற்கான ரூ.50 பஸ் பாஸ் குளறுபடிகளை நீக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறையை நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 200 பேட்டரி பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. கட்டண உயர்வால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மைதான். பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்பும் நாளொன்றுக்கு நான்கு கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 5 நாள்களில் மானிய ஸ்கூட்டர் பெற இதுவரை 1,16,500 பேர் எல்.எல்.ஆருக்கு விண்ணப்பித்துள்ளனர்" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored