``சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் வரும் 12-ம் தேதி திறப்பு!’’Sponsoredபிப்ரவரி 12ம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கவும், தமிழக சட்டப்பேரவையில் அவருடைய உருவப்படத்தை திறக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. இதையடுத்து வரும் 12ம் தேதி சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என சட்டப்பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார். 

Sponsored


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் எடப்பாடி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் ஜெயலலிதா உருவப்படத்தை திறந்துவைப்பார். வரும் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதா உருவப்படம் திறப்பு மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் விழாவில் பங்கேற்பதற்கு பிரதமர் தேதி ஒதுக்காததால் தற்போது சபாநாயகரை வைத்து உருவப்படத்தை திறக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored