'தமிழ் இருக்கைக்கான தி.மு.க. நிதி வந்துசேரவில்லை' - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்Sponsoredஅமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழுக்கென தனி இருக்கை அமைப்பதற்கு நிதி திரட்டப்பட்டது. 

ரூ.40 கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தங்களால் முடிந்த நிதிகளைத் தந்துவந்தனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில், தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதேபோல் தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து அதற்கான காசோலையையும், தமிழ் இருக்கைக்காக  நிதி திரட்டுகிற ஆறுமுகம் அவர்களிடம் நேரில் வழங்கினார். 

Sponsored


இந்த நிலையில், திமுக அளித்த நிதி இன்னும் வந்து சேரவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அதில், "தமிழ் இருக்கைக்கு திமுக அளித்த நிதி இன்னும் வந்து சேரவில்லை. விரைவில் அந்த நிதி வந்து சேரும் என நினைக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு  அருங்காட்சியகம் என்பது வரலாற்று ஆய்வகம் போன்றது. மாணவர்களை தங்கள் பகுதியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்வது அவசியம். அதிரம்பாக்கத்தில் 7,000 கல் ஆயுதங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்"  என்றார். திமுக நிதிக்கான காசோலை அளித்துவிட்ட நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored