``தமிழகத்தை நான் ஆட்சி செய்யவில்லை'' - பின் யாரைச் சொல்கிறார் முதல்வர் பழனிசாமிSponsoredமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழக சட்டப்பேரவையில் அவருடைய உருவப்படம் திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையே,  சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். திறப்பு விழாவை முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். இதன்மூலம் பேரவையில் திறக்கப்படும் 11வது தலைவர் புகைப்படம் இதுவாகும். விழாவில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பூமி உள்ளவரை ஜெயலலிதா புகழ் இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க பேரவையில் அவர் வரலாறு படைத்தார். தமிழகத்தை நான் ஆட்சி செய்யவில்லை. ஜெயலலிதா என்ற தெய்வம்தான் ஆட்சி செய்கிறது. திட்டத்துக்காக மக்கள் அல்ல; மக்களுக்காவே திட்டங்கள் என்று கூறி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி உலகத்தையே உற்றுக் கவனிக்க வைத்தார்'' என்றார்.

Sponsored


இதேபோல் விழாவில் பேசிய ஓபிஎஸ், ``ஜெயலலிதா இறப்பு செய்தியைக் கேட்டு கடலில் துடுப்பு இல்லாத படகுபோல் தத்தளித்தோம். சட்டப்பேரவையை எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்துகொண்டு அவர் சரித்திரம் படைத்தார். மக்கள் நலனுக்காகப் பல திட்டங்களைக் கொண்டுவந்தார். காவிரி நீரைப் பெற்றுத்தர பாடுபட்ட ஜெயலலிதா சட்டப்பேரவையில் தனி ஓர் ஆளாக வந்து கர்ஜித்தவர்" என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored