`ஒரு கையில் டீ, மறு கையில் பக்கோடா' - சாலையோரக் கடையில் ராகுல்காந்தி!Sponsored”சாலையோரத்தில் கடை அமைத்து, பக்கோடா விற்று 200 ரூபாய் சம்பாதிப்பதுகூட முன்னேற்றம்தான்” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். 

பிரதமர் மோடியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. மேலும், இந்தக் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதேபோல், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பக்கோடா விற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதேபோல் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் பஜ்ஜி, பக்கோடா போட்டு விற்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

Sponsored


இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சாலையோர கடையில் பக்கோடா சாப்பிட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று ராய்ச்சூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கல்மாலா என்ற கிராமத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்த சாலையோரக் கடைக்குச் சென்று பக்கோடா சாப்பிட்டார். அவருடன் சென்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் பக்கோடா சாப்பிட்டனர். பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

Sponsored
Trending Articles

Sponsored