தமிழக அமைச்சர்கள்மீது பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டு!Sponsoredகன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களைத் தமிழக அமைச்சர்கள் சாக்குபோக்குச் சொல்லி தடுக்கின்றனர் எனப் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமையவுள்ளது. இதை முன்னிட்டு கோவளத்தில் கருத்து கேட்பு மற்றும் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலம் தேர்வு செய்து தமிழக அமைச்சர்களிடம் தெரிவித்தேன். ஆனால், அங்கு கொக்கு முட்டையிடும் எனக் கூறி அமைச்சர்கள் தடுக்கிறார்கள். 

Sponsored


இதேபோல் கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்த கன்னியாகுமரி - சென்னை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து கொண்டு வர ரூ.20 கோடி ஒதுக்கி மாநில அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பயணிகள் கப்பல் போக்குவரத்து வந்தால் மீனவர்களின் மீன்பிடி வலைகள் நாசமாகும் எனக் கூறி இதற்கும் அமைச்சர்கள் முட்டுக்கட்டைப்போடுகின்றனர்" என்றார். மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று திட்டங்களைப் பெறுகிறோம் என்று அமைச்சர்கள் கூறிவரும் வேளையில் பொன்.ராதாகிருஷ்ணனின் இந்தக் குற்றச்சாட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored