முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் திடீர் மரணம்Sponsoredகன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் இன்று மரணமடைந்தார்

கன்னியாகுமரி மாவட்டம் படுவூரைச் சேர்ந்தவர் ஜான் ஜேக்கப். காங்கிரஸ் கட்சி சார்பாக 2006 மற்றும் 2011-ல் கிள்ளியூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னாளில் ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கிய பிறகு, 2014-ல் த.மா.கா-வில் இணைந்தார். இதன்பின், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் வேட்பாளர் மாற்றப்பட்டதால் ஜான் ஜேக்கப் போட்டியிடவில்லை. இருப்பினும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். 

Sponsored


இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால், இன்று பிற்பகல் அவர் மரணமடைந்தார். நாளை இறுதிச்சடங்கு நடக்கும் எனத் தெரிகிறது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முன்னதாக இவர் விஷம் அருந்தியதால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனத் தகவல் பரவியது.

Sponsored
Trending Articles

Sponsored