``வழக்கமான செக்அப் தான்" அப்போலோ வருகை குறித்து அன்புமணி விளக்கம்!Sponsoredஉடல்நலக் குறைவு காரணமாக அன்புமணி ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். நாடாளுமன்ற எம்பியாகவும் உள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதையடுத்து சென்னை திரும்பிய அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அன்புமணி அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. 

Sponsored


இதுகுறித்து பாமக தரப்பில் கேட்டபோது, "வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காகவே அப்போலோ சென்றார். சிகிச்சைக்கு பின்னர் அன்புமணி வீடு திரும்பிவிட்டார்" என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. 

Sponsored
Trending Articles

Sponsored