ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பயணம் செல்ல ரஜினி திட்டம்?Sponsoredதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சி தொடங்கப்போவதாகக் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு, அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு எழுந்துள்ளது. மேலும், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி, உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்றுவருகிறது.  இதன்பிறகு தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்டவர்களைச் சந்திப்பது என நாளுக்கு நாள் அவரது அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்தது. இதன் முதற்கட்டமாக, மாவட்ட வாரியாகத் தனது மன்றங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துவரும் அவர், மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கத்தை நியமித்து, இன்று அறிவிப்பு வெளியிட்டார். 

Sponsored


விரைவில் கட்சிப் பெயர்குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பயணம் அமையும் என்றும், அநேகமாக திருச்சியில் முதல் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அவரது மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 21-ம் தேதி, தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்த்தும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored