``எல்லாத் தலைவர்களையும் சந்திப்பேன்'' - நல்லகண்ணு வீட்டு முன்பு கமல் பேட்டி!Sponsoredசென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளார். 

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது அரசியல் என்ட்ரிக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர். இருவரும் தங்கள் மக்கள் மன்றத்தின் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரஜினியைக் காட்டிலும் கமல்ஹாசன் வேகமாகச் செயல்பட்டு வருகிறார். அதன்படி வரும் 21-ம் தேதி அப்துல் கலாம் நினைவிடத்தில் தனது கட்சிப் பெயரை அறிவிப்பதுடன், மதுரையில் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Sponsored


அரசியல் கட்சி தொடங்கவுள்ள இந்த நிலையில் மூத்த தலைவர்களைச் சந்தித்து கமல் ஆலோசனை நடத்திவருகிறார். அதன்படி இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்துப் பேசினார். அப்போது ஹேராம் என்ற புத்தகத்தை நல்லகண்ணுக்கு அவர் பரிசளித்தார். பதிலுக்கு நல்லகண்ணுவும் கீழடி என்ற புத்தகத்தைப் பரிசளித்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், "நான் மதிக்கும் நபர்களைச் சந்தித்துப் பேசிவருகிறேன். கட்சியைத் தாண்டி மக்களுக்கு சேவை செய்து வருவதால் நல்லகண்ணுவை சந்தித்தேன். எனது பணி சிறக்க அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததோடு மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்பவர்கள் அனைவரையும் மதிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இடதுசாரி தலைவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு தலைவர்களையும் சந்திப்பேன்" என்று கூறினார்.

Sponsored
Trending Articles

Sponsored