`அவர் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை' - கமலைக் கிண்டலடித்த ஜெயக்குமார்!Sponsoredகமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை. இந்தியாவில் அதை விதைப்பதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் நேரடி அரசியலில் களமிறங்கிவிட்டார். இன்று மாலை கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அவர், தொடர்ந்து பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். அதில் தமிழக அரசியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பேசுவேன் என ஏற்கெனவே அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அரசியல் களத்தில் புதிய காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என நடிகர்கள் அரசியல் வருகை குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்  மு.க.ஸ்டாலின். இதற்கு பதிலளித்த கமல், நான் பூ கிடையாது, விதை என்று தெரிவித்தார். 

Sponsored


கமலின் இந்த கருத்தை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதில், "கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை. இந்தியாவில் அதை விதைப்பதில்லை. நடிகர்களின் அரசியல் காகிதப்பூ போன்றது என ஸ்டாலின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.  மீனவர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் அவருக்கு தலைமைப்பண்பு இல்லை என்பதையே காட்டுகிறது. அவரது அரசியல் வருகை தி.மு.க-வுக்குதான் பாதிப்பு எனப் புரியாத மொழியில் சொல்லியிருக்கிறார். எங்களை எதிர்த்ததால்தான் கமல் போன்றோர் வெளியில் தெரிய ஆரம்பித்தனர்" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored