'பா.ஜ.க- வின் விருப்பத்துக்கு அடிபணிந்து செல்வது வேதனை' - கே.பாலகிருஷ்ணன்!



சென்னை ஐ.ஐ.டி-யில் சம்ஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டதற்கு மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sponsored


சென்னை ஐ.ஐ.டி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்தியப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக மாணவர்கள் மகா கணபதி என்ற சம்ஸ்கிருத பாடலைப் பாடினர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில் ஐ.ஐ.டி. விழாவில் சம்ஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டதுக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

Sponsored


இதுகுறித்து தெரிவித்துள்ள மார்க்ஸிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "பொதுவாக, தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுவதும், மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், இவை இரண்டும் இல்லாமல் இன்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற அரசு விழாவில் சம்ஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல கண்டனத்துக்கு உரியது. அரசு விழாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினுடைய பாடல் இசைக்கப்படுவது என்பது மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட சவாலாகும். 

Sponsored


மேலும், இது சம்ஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிப்பினுடைய இன்னொரு வடிவமாகும். உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்திய பாஜக அமைச்சர்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து செயல்படுவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. பாஜக ஆட்சியாளர்களின் இத்தகைய சம்ஸ்கிருத திணிப்பு மற்றும் மதவாதப் போக்கினை இனியும் தமிழ்நாட்டில் அனுமதிக்காத வண்ணம் அனைவரும் குரலெழுப்பிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.



Trending Articles

Sponsored