வைரலாகும் அமைச்சர் ஜெயக்குமாரின் கிரிக்கெட் விளையாட்டு!Sponsoredஅமைச்சர் ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பேட்டிகள், அதிரடி கருத்துகள் வெளியிடுவது என அ.தி.மு.க அமைச்சர்கள் பிஸியாக வலம்வந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி, தினமும் அதிரடி பேட்டிகளைக் கொடுத்து லைம்லைட்டில் இருப்பவர் என்றால் அது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்தான். தினமும் அவர் கொடுக்கும் பேட்டிகள், ஸ்டேட்மென்டுகள் என இணையத்தில் லைக்குகளைக் குவிக்கும். அந்த அளவுக்கு அவருக்கு இணையத்தில் மவுசு இருக்கிறது. 

Sponsored


இந்நிலையில், கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று அவர் பந்தை விளாசும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. பெரம்பூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைக்க சென்ற அவர் சிறிதுநேரம் விளையாடியுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடிய ஜெயக்குமார் ஒரு பந்தை சிக்ஸருக்கு விளாசுவது போல் அடித்துள்ளார். இதேபோல் கூடைப்பந்து போன்றவற்றையும் விளையாடியுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. 

Sponsored
Trending Articles

Sponsored