இந்தி கற்கும் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்!- கலகலத்த புகழேந்திSponsoredஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இந்தி கற்றுவருவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தஞ்சாவூரில் தெரிவித்துள்ளார். 

புகழேந்தி பேசுகையில், “தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள் தினமும் காலையில் ஒரு மணிநேரம் இந்தி கற்றுக்கொண்டு வருகிறார்கள். வருங்காலத்தில் 'இந்தி வாழ்க' என தமிழக அமைச்சர்கள் குரல் எழுப்புவர்கள். அதையும் தமிழகம் பார்க்கத் தான் போகிறது. பிரதமர் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தான் இந்தி கற்றுக்கொண்டு வருவதாக, அவர்களிடம் உள்ளவர்கள்  சொல்லுகிறார்கள்.

Sponsored


அமைச்சர் ஜெயக்குமார், மற்றவர்கள் சொல்லுவதை கேட்டுக்கொண்டு, ஊடங்களில் உளறி வருகிறார். ஜெ.,சிலை அமைக்க யாரிடம் அனுமதி பெற்றார்கள் என தெரியவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் சிலையை சரி செய்ய 15 நாள் நேரம் கேட்டுள்ளார்.காவிரியில் தற்போது 14 டி.எம்.சி., தண்ணீரை இழந்து விட்டோம். அதை இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என தெரியவில்லை. ஆனால் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரு டி.எம்.சி., தண்ணீர் குறைக்கப்பட்டிருந்தாலும், அவரின் போராட்டத்தை கர்நாடக மாநிலம் எதிர்கொண்டிருக்க முடியாது. மத்திய அரசோடு இணக்கமாக போவதால், ஆந்திராவில் இருந்து தண்ணீர் வரப்போகிறது என பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Sponsored


காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவர்களை நிச்சயம் சந்திக்க மாட்டார். அப்படி மோடி சந்தித்து விட்டால், நான் அரசியலை விட்டு வெளியே சென்று விடுகிறேன். இவை எல்லாம் ஒரு நாடகம், கண்துடைப்பு வேலை. ரஜினிக்கும், கமலுக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் அரசியலில் நீடிக்க மாட்டார்கள். அவர்கள் பற்றி கவலையில்லை.

மணல் விவகாரத்தில் பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் யுத்தம் தொடங்கியுள்ளது. மணல் குவாரிகளை பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். பா.ஜ.,தேசிய செயலாளர் ராஜா தமிழுக்கு எதிராக பேசிக்கொண்டு இருக்கிறார். அதேர்தலில் பா.ஜ.,க்கு மீறி போனால் 1500 ஓட்டு தான் வரும்” என்றார்.Trending Articles

Sponsored