`பெரியார் மீதான காழ்ப்பு உணர்ச்சி காரணமாகவே ஹெச்.ராஜா பேசுகிறார்' - கொந்தளிக்கும் டி.டி.வி.தினகரன்!Sponsoredஹெச்.ராஜா, இன்று காலை தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை, தமிழகத்தில் பெரியார் சிலை' எனப் பதிவிட்டிருந்தார். இவரின் கருத்து, தமிழகத்தில் அடுத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இவரின் கருத்துக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரன், தேனிக்குச் செல்லும் வழியில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

இதுகுறித்து டி.டி.வி.தினகரனிடம் கேட்டபோது, ``ஆட்சி அதிகாரம் மத்தியில் இருக்கிறது என்பதற்காக, ஹெச்.ராஜா இதுபோ‌ன்று பேசி அவரின் தரத்தை அவரே தாழ்த்திக்கொள்கிறார். அவருக்கு, தமிழக மக்கள் நிச்சயம் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். பெரியார் சாதி மறுப்பு, பிராமன ஆதிக்க எதிர்ப்பு ஆகிய பிரசாரங்களைச் செய்ததால், அவர்மீது கொண்ட காழ்ப்பு உணர்ச்சி காரணமாக ஹெச்.ராஜா அவ்வாறு பேசிவருகிறார். பா.ஜ.க, இந்தியா முழுவதும் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. ஏனென்றால், இது திராவிட மண். இந்தியாவில் பொதுவுடமைக் கொள்கை அவசியம் தேவை. ஒரு தேர்தலில் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக, அந்தக் கட்சியை அழிக்க வேண்டும் என பா.ஜ.க நினைப்பதை ஏற்க முடியாது.

Sponsored


மேலும், எம்.ஜி.ஆர் ஒரு மாபெரும் சகாப்தம், அவரை சார்ந்துதான் பல்வேறு இயக்கங்கள் செயல்பட்டன. தி.மு.க-வே எம்.ஜி.ஆரை ஒரு கட்டத்தில் புகழ்ந்து பேசியது. தற்போது அரசியலுக்கு வருபவர்கள், அரசியலில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரைப் பற்றி பேசுகிறார்கள். அரசியலில் நல்ல தலைவரை மக்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள். அது, தேர்தல் நேரத்தில் தெரியும்" என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored