'சசிகலாவுக்கு பரோல் கோரி இன்று மனு' - டி.டி.வி.தினகரன் தகவல்!



Sponsored



சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்குச் சமீபத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரின் உடல் நலம் தேறியுள்ளதாகவும் இனி எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துமனையில் நலமாக உள்ளது போன்ற புகைப்படங்களும் வெளியாகின.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவருக்கு மீண்டும் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. எனினும் அவரின் உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் வெளியாகி வந்த நிலையில்   அதற்கு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது, அதில், "நடராசன், நோய்த்தொற்று காரணமாக கடந்த 16/03/2018 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. தொடர்ந்து அவரின் நிலை மோசமாக உள்ளது. மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்’  என குறிப்பிடப்பட்டிருந்தது.

Sponsored


இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராசனை டி.டி.வி.தினகரன் நேற்றிரவு சந்தித்தார்.  சந்திப்புக்கு பின் பேட்டியளித்த அவர், "நடராசனின் உடல்நிலையில் முன்பைவிட தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் வெண்டிலெட்டலர் உதவியுடன் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு பரோல் பெறுவதற்காக வழக்கறிஞர்கள் பெங்களூரு சிறைக்கு சென்றுள்ளனர். இன்று  பரோல் வழங்க கோரி மனு அளிக்கப்படும்" என்றார். 

Sponsored




Trending Articles

Sponsored