'ஊழலின் காரணமாக தூக்கியெறியப்பட்ட கட்சி காங்கிரஸ்' - நிர்மலா சீத்தாராமன் காட்டம்!



Sponsored



டெக்னாலஜிக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குற்றம் சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் துவங்கிய மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாஜகவை கடுமையாக சாடினார். அதுமட்டுமில்லாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறி மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என வற்புறுத்தினர். காங்கிரஸ் தலைவர்களின் இந்தக் கருத்துக்கு தற்போது பாஜக பதிலடி கொடுத்துள்ளது. பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசுகையில், "ராகுல்காந்தியின் மொத்த உரையும், தோல்வியின் வெளிப்பாடகவே தெரிகிறது. காங்கிரஸ் கட்சி ஊழலின் காரணமாக தூக்கியெறியப்பட்ட கட்சியாகும். ராமர் இருந்தார் என்பதை மறுக்கும் காங்கிரஸ் தங்களைப் பாண்டவர்கள் என்று கூறிக்கொள்கிறது. அக்கட்சி இந்துக்களையும், இந்து சடங்குகளையும் காப்பியடித்துக் கொண்டு செயல்படுகிறது. 

Sponsored


முந்தைய மத்திய அரசு பல தவறான முடிவுகளை எடுத்தது. விவசாய கடன் தள்ளுபடி என்ற தவறான முடிவை காங்கிரஸ் எடுத்ததால் தான் அதற்கடுத்து விவசாயிகளால் கடன் பெற முடியவில்லை. தொழில்நுட்பத்துக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. அதன்காரணமாக தான் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைசொல்லுகிறார்கள். இயந்திரங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவை. ஆனால் காங்கிரஸூக்கு வெளிப்படைத்தன்மையில் சுத்தமாக நம்பிக்கை இல்லை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளன. கறுப்புப் பணத்திற்கு எதிராக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜிஎஸ்டி, மின்னணு பரிவர்த்தனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு வரிவருவாய் அதிகரித்துள்ளது" என்றார்.

Sponsored




Trending Articles

Sponsored