'தாங்க முடியாத பேரிழப்பு' - நடராசனுக்கு டி.டி.வி தினகரன் இரங்கல்!Sponsoredசசிகலாவின் கணவர் நடராசன், நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக, சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

அவரது உடல், சென்னை பெசன்ட் நகரில் அஞ்சலி செலுத்துவதற்காக சிலமணி நேரங்கள் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், தஞ்சாவூரில் உள்ள நடராசனுக்குச் சொந்தமான இல்லத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சசிகலாவிற்கு கடுமையான நிபந்தனைகளுடன் 15 நாள்கள் பரோல் வழங்கி பெங்களூரு சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து பெங்களூருவிலிருந்து கார் மூலம் தஞ்சைக்கு வந்தார் சசிகலா. அவரை டி.டி.வி தினகரன் அழைத்து வந்தார். 

Sponsored


இதற்கிடையே, நடராசன் உடல் வைக்கபட்டுள்ள தஞ்சை இல்லத்தில் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, "நடராசன் இழப்பு எங்களுக்கு தாங்க முடியாத பேரிழப்பு. முசிறி அருகே சென்று சசிகலாவை நான்  அழைத்து வந்தேன். காரில் வரும் போது  என்னிடம் அவர்  எதுவும் பேசவில்லை. அவருக்கு பரோல் எத்தனை நாள் கிடைத்திருக்கிறது என்று கூட  எனக்கு தெரியவில்லை. உடல் அடக்கம் குறித்து உறவினர்களிடம் சசிகலா பேசி வருகிறார். நடராசன் அண்ணன் சாமிநாதன் ஆலேசானையின் படி உடல் அடக்கம்  எப்போது என முடிவு செய்வோம்" என்று  தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored