நடராசன் படத்திறப்பு நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொள்ளவில்லை!



நடராசனின் படதிறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவிருக்கிறது. இதில் சசிகலா கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Sponsored


சசிகலா கணவர் நடராசன் உடல்நலக் குறைவால் கடந்த 20-ம் தேதி உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்கிற்காக பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா பரோல் மூலம் வெளியே வந்தார். நடராசனின் உடல் விளார் செல்லும் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையியல் தஞ்சாவூரில் தங்கியிருக்கும் சசிகலாவைச் சந்தித்து, வைகோ, சீமான், வீரமணி மற்றும் ஏராளமான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

Sponsored


இதனையடுத்து நடராசனின் படத்திறப்பு விழா அவருக்குச் சொந்தமான தமிழரசி திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மனிக்கு நடைபெறுகிறது. இதில், பழ.நெடுமாறன், நல்லகண்ணு, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், சீமான், வைரமுத்து, பாரதிராஜா, கே.ஆர்.ராமசாமி, தி.மு.க-வைச் சேர்ந்த எல்.கணேசன் மற்றும் டி.டி.வி.தினகரன், திவாகரன் எனப் பலர் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நடராசனின் தம்பி பழனியப்பன் மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள். இதற்கிடையே, இந்தப் படத்திறப்பு நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொள்வது சந்தேகமே என உறவினர்கள் மத்தியில் பேச்சுக் கிளம்பியுள்ளது. 

Sponsored


இது குறித்து விவரங்கள் அறிந்தவர்களிடம் பேசினோம்,``பரோலில் வந்துள்ள சசிகலா கட்சி நிகழ்ச்சிகள், நிர்வாகிகளைச் சந்திக்கக் கூடாது, அரசியல் குறித்து எதுவும் பேசக் கூடாது என்றும் மீடியாவிற்கு பேட்டியளிக்கக் கூடாது எனவும் சிறைத்துறை கட்டுப்பாடு விதித்திருந்தது. கணவர் சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் என்றதோடு வெளியே செல்வதற்கும் எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஆனாலும், சசிகலா படத்திறப்பு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம். ஏனென்றால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் ஏதேனும் அரசியல் குறித்து பேச வாய்ப்பிருக்கிறது. தவிர, சசிகலா கலந்துகொண்டால் அவரும் மைக் பிடித்து சில வார்த்தைகள் பேச வேண்டியிருக்கும். 

அதோடு தான் எங்கு சென்றாலும் அது பெரிய செய்தியாகி விடுகிறது. இதனால், எந்தச் சிக்கலும் ஏற்படக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார். அதனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருப்பதையே சசிகலா விரும்புகிறார். ஆனால், குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் இதில் நீங்கள் இருந்தால்தான் இந்த நிகழ்ச்சி முழுமை பெறும். அதனால் நீங்கள் வர வேண்டும் என அன்புக் கட்டளையிடுகிறார்கள். ஆனாலும், நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம் என்பதே சசிகலாவின் முடிவாக இருக்கிறது" என்கிறார்கள். 



Trending Articles

Sponsored