`அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்!காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Sponsored


உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரிக்கான போராட்டத்தைத் தமிழக கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த தி.மு.க முடிவு செய்துள்ளது. மற்றக்கட்சிகளும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளன. 

Sponsored


இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்புண்டு. காவிரிக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் பதவியை ராஜினாமா செய்து தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும். அரசியல் ரீதியான அழுத்தத்தை மத்திய அரசுக்குத் தமிழக அரசு அளிக்க வேண்டும். எந்தவகையில் அழுத்தம் கொடுத்தாலும் அது பாராட்டுக்குரியது" என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored