`தமிழக உரிமை நிலைநாட்டப்படும்' - எடப்பாடி பழனிசாமி உறுதி..!Sponsoredகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. எனினும், வாரியத்தை அமைக்காமல் `ஸ்கீம்' என்ற பெயருக்கு விளக்கம் கேட்டும், வாரியம் அமைக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகள் முதல் அமைப்புகள் வரை அனைவரும் காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. 

Sponsored


இந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் மனுவை எதிர்கொள்ளும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை எடுத்துவைக்க வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்னையான காவிரி விவகாரத்தில் நமது உரிமைகள் நிலைநாட்டப்படும்" எனக் கூறியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored