காவிரி மேலாண்மை வாரியம் கோரி பச்சை துண்டு அணிந்து போராட்டம் நடத்திய ஸ்டாலின்!Sponsoredஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மு.க ஸ்டாலின், பச்சை துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து  தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக மெரினா கடற்கரையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மத்திய அரசுக்கு எதிரான பதாகையை ஏந்தியவாறு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மத்திய அரசு ஆளும் அ.தி.மு.க அரசின் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு  அழைப்பு  விடுத்திருந்தது. இந்நிலையில், இன்று  மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

Sponsored


Sponsored


கூட்டம் முடிவடைந்ததையடுத்து, திடீரென தி.மு.க , காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அரசு மற்றும் மாநில அரசைக் கண்டித்து, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க மற்றும் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில், பேசிய ஸ்டாலில், `மத்திய அரசை கண்டித்து ஏப்.5 ஆம் தேதியில் நடைபெறும் முழு கடையடைப்பின்போது,  ரயில், பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தப்படும்' என்றார். மேலும், மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்' எனவும் தெரிவித்தார். போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Trending Articles

Sponsored