`எங்கள் போராட்டத்தால் காவிரி பிரச்னையில் நல்ல தீர்ப்பு வரும் நிலை உருவாகியுள்ளது' - தம்பிதுரை!Sponsored`முதல்வர், துணை முதல்வரின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் திசைதிருப்ப தி.மு.க முயற்சி செய்கிறது' என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர். இதேபோல் தி.மு.க சார்பிலும் டி.டி.வி.தினகரன் சார்பிலும் காவிரிக்காகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. 

Sponsored


இந்நிலையில், தம்பிதுரை தலைமையில் இன்றும் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ``காவிரி பிரச்னை இன்று ஏற்பட்டது அல்ல. அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன் தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே காவிரி பிரச்னை ஆரம்பம் ஆகிவிட்டது. தி.மு.க நினைத்திருந்தால் அப்போதே அதற்குத் தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், அதைவிடுத்து காவிரி பிரச்னையில் அவர்கள் அரசியல் செய்கிறார்கள். இன்று தி.மு.க-வினர் வேண்டுமென்றே மறியல் செய்கிறார்கள். முதல்வர், துணை முதல்வரின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் திசை திருப்பவே, அவர்கள் மறியலில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஜனநாயக முறையில் நாங்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறோம். அதனால் காவிரி பிரச்னை வெற்றிபெறும் நிலையில் உள்ளது" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored