3 பிரிவுகளின்கீழ் ஸ்டாலின்மீது வழக்கு பதிவு!Sponsoredதி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின்மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலையில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர், சாலையில் அமர்ந்து கறுப்புக்கொடி பிடித்து போராட்டம் நடத்தினர். 

Sponsored


சாலை மறியலைத் தொடர்ந்து, அண்ணா சமாதி நோக்கி பேரணியாகச் சென்று, உழைப்பாளர்கள் சிலைக்கு அருகே சாலையில் அமர்ந்து தொடர் கோஷங்களை எழுப்பினர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியாகச் செல்ல, அண்ணாசாலை ஸ்தம்பித்தது. இதையடுத்து மெரினாவில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து, குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்றனர். கைதுசெய்யப்பட்ட ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர், வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

Sponsored


இந்நிலையில், போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். தடையை மீறி போராட்டம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதற்கிடையே, காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. Trending Articles

Sponsored