`காவிரியைக் கொண்டுவருவதில் பா.ஜ.க-வுக்கு மட்டுமே அக்கறை' - சொல்கிறார் தமிழிசை!Sponsoredகாவிரியைக் கொண்டுவருவதற்கான அக்கறை, பா.ஜ.க-விடம்தான் உள்ளது. போராடுபவர்களிடம் இல்லை எனத் தமிழிசை தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக கவனத்தை ஈர்க்க ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டுமெனத் தமிழ் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கின. ஆனால், இதற்கு ஐபிஎல் நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவே, இன்று நடந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. போராட்டத்தால் மைதானத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. 

Sponsored


இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ``ஒரு மாதத்தில் காவிரிப் பிரச்னையில் தீர்வு ஏற்படும். திமுக, காங்கிரஸ் கூட்டணி, காவிரி விவகாரத்தில் கர்நாடகா வஞ்சித்தபோது உங்களுக்கு உணர்ச்சி ஏற்படவில்லையா. போராட்டத்தால் காவிரியைக் கொண்டுவர முடியாது. காவிரியை தமிழகம் கொண்டுவருவதற்கான அக்கறை, பா.ஜ.க-விடமும் மத்திய அரசிடமும்தான் உள்ளது; போராடுபவர்களிடம் இல்லை. போராட்டத்தால் உணர்ச்சிக் கொந்தளிப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும். நியூட்ரினோ திட்டத்தில் விவசாயம், பயங்கரவாதக் கண்காணிப்பு என பல்வேறு நன்மைகள் உள்ளன" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored