``மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்” தி.மு.க தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!



Sponsored



தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்  கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைந்து போராட்டங்கள் முன்னெடுத்து வருகிறது. ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டிய நிலையில் இன்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் உட்பட  பல கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

Sponsored


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தீக்குளித்து உயிரிழந்திருந்தார் . இதற்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இதுபோன்ற பிரச்னைகளில், உயிர்வாழ்ந்து தீரம்மிக்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமேயன்றி, யாரும் தீக்குளித்தல் போன்ற அதிதீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். 

Sponsored


இரங்கல் தீர்மானம் தவிர இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான அசாதாரண சூழ்நிலையை மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் மத்திய அரசுக்குத் தெளிவு படுத்திட வேண்டும் என்ற விரிவான கோரிக்கை மனுவை அனைத்துக்  கட்சித் தலைவர்களும் ஆளுநர் அவர்களிடம் நேரில் அளிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆளுநர் அவர்களைக் கேட்டுக்கொண்டனர். 

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர மாவட்டத் தலைநகரங்களில் அனைத்துக்கட்சியினர் சார்பில்  ’மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்’ நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. வரும் 23-ம் தேதி இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தீவிர அழுத்தம் கொடுக்கவும், தமிழகத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்களை நேரில் எடுத்துரைக்கவும் அனைத்துக் கட்சித்  தலைவர்கள் பிரதமரைச்  சந்திப்பது என்றும், அதற்குரிய நேரம் கேட்பது என்றும் இக்கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.



Trending Articles

Sponsored