`சி.பி.ஐ விசாரணை தேவையில்லை!’ - நிர்மலா தேவி விவகாரத்தில் ஜெயக்குமார் பதில்''மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி விவகாரத்தில், யாருக்குத் தொடர்பு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

Sponsored


கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைக்கும் தொனியில், கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி பேசும் ஆடியோ, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஆளுநர் பன்வாரிலால் விசாரணையைத் தொடங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு காவல்துறைமூலம் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த விவகாரத்தில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. இந்த விவகாரம்குறித்து பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored