ராமலிங்கம் அளித்த வாக்குமூலம் என்ன? - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்Sponsoredதனது உடல்நிலையை விசாரித்த பிரதமர், ஆளுநர் ஆகியோருக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார் என அவரின் தனிச் செயலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை பல்வேறு நிலைகளைக் கடந்துள்ளது. ஜெயலலிதா வீட்டுச் சமையல்காரர் முதல் தலைமைச் செயலாளர்கள் வரை அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் பல பேரிடம் விசாரணை தொடரும் என ஆறுமுகசாமி கமிஷன் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ராமலிங்கம் இன்று விசாரணை கமிஷனில் ஆஜராகி விளக்கமளித்தார். 

Sponsored


அவர் அளித்த வாக்குமூலம் குறித்து, ஆறுமுகசாமி ஆணையம் விளக்கமளித்துள்ளது. அதில், ``மருத்துவமனையில் இருந்தபோது தனது உடல்நிலை குறித்து ஆளுநர், பிரதமர் விசாரித்ததற்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் தந்தார். மருத்துவரின் மூலமே ஜெயலலிதா கையெழுத்திட்ட கடிதத்தைப் பெற்றேன். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 மற்றும் 27 தேதிகளில் அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவைத் தான் நேரில் பார்த்தேன்" இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored