'இந்தி புரியவில்லை..!' - பா.ஜ.க தேசியச் செயலாளருக்கு சித்தராமையா கொடுத்த பதில்



ஆட்சியைத் தொடர்ந்து அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ்... வியூகம் வகுத்து ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் பா.ஜ.க... இப்படியாகக் கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேர்தல் பணிகளில் இருகட்சியினரும் மும்மரமாகச் செயல்பட்டிருக்கும் நிலையில், ட்விட்டரில் முதலவர் சித்தராமையா மற்றும் பா.ஜ.கவினர் இடையில் மொழி கருத்து மோதல் எழுந்துள்ளது. 

Sponsored


அடுத்த மாதம் 12-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக, முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அவர் கூடுதலாக பாதாமி தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு, போட்டியிடுவதற்காக நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Sponsored


Sponsored


2 தொகுதியில் போட்டியிடும் சித்தராமையாவை, பா.ஜ.கவின் தேசிய செயலாளர் முரளிதர ராவ்  இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார். அதில் 'சித்தராமையா ஜி, அதீத ஆலோசனைக்குப் பின்னரே மைசூர், சாமுண்டீஸ்வரி தொகுதியை நீங்கள் தேர்வு செய்தீர்கள். தற்போது, அத்தொகுதியில் நின்றால் வெற்றி பெற முடியாது என்று எண்ணி, பயத்தில் மற்றொரு தொகுதியிலும் போட்டியிட்ட திட்டமிட்டிருக்கிறீர்கள். உங்கள் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன், இரண்டு தொகுதியில் மட்டுமல்ல, கர்நாடக முழுவதும் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும்' என இந்தி மொழியில் ட்வீட் செய்தார். 

இவரின் ட்வீட்-வுக்கு பதில் அடி கொடுத்த சித்தராமையா 'எனக்கு இந்தி புரியவில்லை, அதனால் கன்னடம் அல்லது ஆங்கில மொழியில் ட்விட்டை பதிவு செய்யுங்கள்' என்று பதிவிட்டு பா.ஜ.வின் இந்திமொழி திணிப்பை மறைமுகமாகச் சாடி, கன்னடத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.   சித்தராமையா பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக முரளிதர ராவ் மீண்டும் கன்னடத்தில் பதிவிட்டிருக்கிறார். 



Trending Articles

Sponsored