பாதுகாப்பைப் பலப்படுத்த ரூ.3.50 லட்சம் கோடி! - நிதிக் கமிஷனுக்கு அறிக்கை அளித்த ராஜ்நாத்



' உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் காவல்துறையை நவீனப்படுத்துதல் தொடர்பான பணிகளுக்கு, 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது' எனப் பேசியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

Sponsored


டெல்லியில், இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ' பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவற்றில் போலீஸார் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றனர். ஆனாலும், உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாக இருக்கிறது. அமைச்சர்களின் பொறுப்புகளும் கூடுதலாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு, மத்திய ஆயுதப்படைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் அதிகம். எனவே, வரக்கூடிய 2020 - 2025-ம் ஆண்டுகளில் உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும் எனக் கணித்துள்ளோம்.

Sponsored


இதுதொடர்பாக, 15–வது நிதிக் கமி‌ஷன் தலைவர் என்.கே.சிங்குக்குப் பரிந்துரைசெய்திருக்கிறோம். கமி‌ஷனிடம் விரிவான அறிக்கையும் அளிக்கப்பட உள்ளது' என்றவர், 'பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பது என்பது சவாலாக உள்ளது. போலீஸ் துறை, குடியேற்றம், விசா, வெளிநாட்டவர் பதிவு மற்றும் கண்காணிப்பு, கடலோரப் பாதுகாப்பு, எல்லைக் கட்டுமானம், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட துறைகளை நவீனப்படுத்துவதற்கான செலவுகள்குறித்தும் நிதிக் கமிஷனிடம் விரிவாக எடுத்துரைத்திருக்கிறோம்' என்றார். 

Sponsored




Trending Articles

Sponsored