`மோடியின் மனநிலை இதுதான்!' - பேரணியில் கொதித்த ராகுல்Sponsored`அரசியலமைப்பு சட்டத்தைக் காப்போம்' என்ற முழக்கத்தோடு நாடு தழுவிய பிரசாரப் பேரணியைத் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. `அரசியலமைப்புச் சட்டத்தில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலையீட்டை பொறுத்துக்கொள்ள முடியாது. இப்போது நீதித்துறைக்கும் நெருக்கடி கொடுக்கிறார்கள்' எனக் கொந்தளிக்கிறார் ராகுல். 

டெல்லி, டக்கடோரா மைதானத்தில் பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய ராகுல் காந்தி, `உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மோடி அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மோடியின் உரைகளைத் தொகுத்து எழுதப்பட்ட கர்மயோகி புத்தகத்தில், `கையால் மலம் அள்ளும் தொழில் செய்பவர்களை, வால்மீகி சமூகம் என்று குறிப்பிட்டு, இது ஆன்மீக அனுபவம்' எனப் பதிவு செய்திருக்கிறார்.

Sponsored


பட்டியலின சமூகத்தினர் மீதான அவரது பார்வைக்கு, இந்தப் பதிவு ஒன்றே போதும். `கால்வாய்களையும் கழிவறைகளையும் சுத்தம் செய்யும் பிற்படுத்தப்பட்ட மக்கள், ஆன்மிக மகிழ்ச்சி பெறுகிறார்கள்' என்று மோடி பேசி வருகிறார். இப்படியெல்லாம் நினைப்பதற்கு அவர்களால் மட்டுமே முடியும்' எனப் பேசினார். அந்த பேரணியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Sponsored
Trending Articles

Sponsored